அதிரடியாக எழில் திருமணத்தை நிறுத்திய பாக்யா.. நடக்கப்போவது என்ன ?

Baakiyalakshmi
 ‘பாக்யலஷ்மி’ சீரியலில் எழிலின் திருமணத்தை நிறுத்தி பாக்யா அதிரடி காட்டுகிறார். 

மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது பாக்யலஷ்மி சீரியல். கணவர் பிரிந்த நிலையில் தனது குடும்பத்தினருக்காக போராடும் பெண்ணின் கதைதான்‌ இந்த சீரியல். தற்போது சமையல் பிசினஸ் செய்யும் பாக்யா, அதன் மூலம் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுகிறார். 

Baakiyalakshmi

தற்போதைய கதைப்படி தன்னுடைய வீட்டை தனக்கு திருப்பி கொடுக்கவேண்டும் என்று பாக்யாவிடம் சவால் விடுகிறார் கோபி. அதனால் எழில் மற்றும் வர்ஷினியின் திருமணத்தை நடத்தி, அதன்மூலம் பணத்தை கொடுக்க ஈஸ்வரி பாட்டி திட்டம் போகிறார். அதன்படி எழில் மற்றும் வர்ஷினி நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது. இதை பார்க்கும் அமிர்தா, அதிர்ச்சி அடைகிறார். 

Baakiyalakshmi

இதையடுத்து மண்டபத்தை விட்டு அழுதுக் கொண்டே செல்லும் அமிர்தாவிடம் எழில் மன்னிப்பு கேட்டு காலில் விழுகிறார். அப்போது பாக்யா பார்த்துவிடுகிறார். பணத்திற்காக தான் எழில் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை பாக்யாவிற்கு தெரிகிறது. இதனால் அதிரடியாக திருமணத்தை நிறுத்துகிறார். ஆனால் ஈஸ்வரி பாட்டி, கோபி ஆகியோர் இதற்கு எதிர்பார்ப்பு தெரிகின்றனர். இருந்தப்போதிலும் தனது முடிவில் பாக்யா விடாபிடியாக இருக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் காட்டப்பட்டது. 


 

Share this story