கலர்ஸ் தமிழிலும் ‘பாக்யலட்சுமி’ சீரியல்.. குழப்பத்தில் ரசிகர்கள் !

baakiyalakshmi

 விஜய் டிவியை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் ‘பாக்யலட்சுமி’ சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. கோபி, பாக்யா, ராதிகா ஆகிய கதாபாத்திரங்களை வைத்து இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. படிக்காத தன்னை விட்டுவிட்டு தோழி ராதிகாவை திருமணம் செய்துக்கொள்கிறார் கோபி. இதனால் கொஞ்சமும் அச்சப்படாமல் தனி ஒரு பெண்ணாக இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றும் பாக்யலட்சுமியின் கதைதான் இந்த சீரியல். 

baakiyalakshmi

திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ப்ரைம் டைமில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இல்லத்தரசிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் நல்ல டிஆர்பியை பெற்று வருகிறது. தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் சென்றுக் கொண்டிருக்கிறது. 

baakiyalakshmi

இதற்கிடையே கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் கன்னட சூப்பர் ஹிட் சீரியல் இரண்டு ரீமேக் செய்யப்பட்டு ஒளிப்பரப்பப்பட இருக்கிறது. அதில் ஒரு சீரியலுக்கு பாக்யலட்சுமி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒரே தலைப்பை விஜய் மற்றும் கலர்ஸ் தமிழ் என இரண்டிலும் வைத்துள்ளதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இருந்தப்போதிலும்  

Share this story