சவாலில் ஜெயித்த பாக்யா.. வீட்டை விட்டு வெளியேறிய கோபி !

பாக்யா சொன்னபடி பணத்தை கொடுத்ததால் கோபியும், ராதிகாவும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ சீரியல் பரபரப்பு கதைக்களத்துடன் சென்றுக் கொண்டிருக்கிறது. ராதிகாவை கோபி திருமணம் செய்த பிறகு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அதன்பிறகு பணத்தை கொடுக்கும் வரை நானும், ராதிகாவும் இங்கேதான் இருப்போம் என்று கூறி விடுகின்றனர்.
அதனால் நானே வீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று பாக்யா சொல்கிறார். முதலில் 2 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கும் பாக்யா ஒரு மாதத்தில் மீதமுள்ள 20 லட்சம் தருகிறேன் என்று கோபியிடம் கூறிகிறார். அப்படி தந்துவிட்டால் வீட்டை விட்டு கோபியும், ராதிகாவும் வெளியேற வேண்டும் என்று சவால் விடுகிறார்.
சவாலில் பாக்யா ஜெயிப்பாரா என்ற பரபரப்பு களத்துடன் சீரியல் சென்றுக் கொண்டிருந்தது. ஏற்கனவே கேன்டீன் வருமானத்தை வைத்து வீட்டை பார்த்துக் கொள்கிறார். இதனால் என்ன செய்வது என்று தவித்து வரும் பாக்யாவிற்கு பெரிய ஆர்டர் கிடைக்கிறது. அந்த ஆர்டரின் மூலம் பாக்யாவிற்கு 20 லட்சம் வருமானம் வருகிறது.
இந்நிலையில் ஒரு மாதம் முடிந்த நிலையில் பாக்யாவை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார் கோபி. ஆனால் சவாலின்படி 20 லட்சம் ரூபாயை கோபியிடம் பாக்யா கொடுக்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் கோபி, ராதிகா கூப்பிட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இப்படி பரபரப்பு களத்துடன் பாக்யலட்சுமி சீரியல் சென்றுக் கொண்டிருக்கிறது.