என்ன அமிர்தா இதெல்லாம்... எழில் பாத்த என்ன நினைப்பாரு ?

rithika

'பாக்யலட்சமி' சீரியல் நடிகை ரித்திகாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. தனது கணவன் பிரிந்து சென்ற நிலையிலும் தன் குடும்பத்திற்காக போராடிவரும் ஒரு துணிச்சல் மிக்க பெண்ணின் கதை தான் இந்த சீரியல். தற்போதைய கதைப்படி தனது வீட்டை திருப்பி தரும்படி பாக்கியாவிடம் கோபி கேட்கிறார். 

rithika

ஆனால் வீட்டை தர முடியாது என்றும் அதற்கு பதிலாக பணம் தருகிறேன் என்று எழில் சவால் விடுகிறார். திட்டமிட்டபடி பணத்தை தயார் செய்ய முடியாததால் சினிமா பைனான்சியர் மகளை திருமணம் செய்து வைக்க ஈஸ்வரி பாட்டி முடிவு செய்கிறார். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்த திருமண ஏற்பாடுகளை நேரில் பார்த்த அமிர்தா அதிர்ச்சி அடைகிறார். அதன்பிறகு எழில் கட்டாயத்தின் பேரில் தான் திருமணம் செய்யவுள்ளார் என்ற உண்மையை பாக்யா தெரிந்துக்கொள்கிறார். பின்னர் திருமணத்தை நிறுத்தி எழில் - அமிர்தா திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதனால் பாக்யா பல சிக்கல்களை எதிர்கொள்கிறார். 

இந்நிலையில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரித்திகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தாலியை தானே கட்டிக் கொள்ளும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக இருக்கும் ரித்திகா, ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர். சிவா மனதுல சக்தி, திருமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அதோடு குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு கலக்கியிருந்தார் ரித்திகா என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story