'பாக்யலட்சுமி' சீரியலில் புதிய கோபி இவரா.. அதுக்கு சரிப்பட்டு வருவாரா ?

baakiyalakshmi

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. 

பாக்யலட்சுமி மற்றும் கோபி ஆகிய இரு கதாபாத்திரங்களை வைத்து ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கும் இந்த சீரியல் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. தனது கணவர் பிரிந்து சென்ற நிலையிலும் தனி ஒரு பெண்ணாக குடும்பத்தையே தாங்கி பிடிக்கும் பாக்யாவின் கதைதான் இந்த சீரியல் 

 baakiyalakshmi

இந்த சீரியலில் சமீபத்தில் இணைந்த பிரபல சினிமா நடிகர் ரஞ்சித் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது வருகைக்கு பிறகு பாக்யாவும், ரஞ்சித்தும் நெருங்கி பழகுவது போன்று காட்சிகள் நகர்ந்து வருகிறது. இதற்கிடையே தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் கோபியால் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் பாக்யா தங்கியிருக்கும் வீட்டிற்கே ராதிகாவும் செல்கிறார். தற்போது கோபி, பாக்யா, ராதிகா ஆகிய மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டத்துடன் சீரியல் நகர்ந்து வருகிறது. 

baakiyalakshmi

இதற்கிடையே தவிர்க்க முடியாத சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகுவதாக கோபி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சதீஷ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சொல்லவே கஷ்டமாக இருந்தாலும், சொல்லித்தான் ஆகவேண்டும். நான் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேன். இன்னும் 15 எபிசோடுகள் மட்டும் நடிப்பேன். அதன்பிறகு விலகிவிடுவேன். என்னுடைய விலகலுக்கு பல காரணங்கள் உள்ளது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சதீஷூக்கு பதில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அந்த வகையில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கோபி போன்று சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் பிரித்விராஜ் தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரியானவர் என்று கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

Share this story