விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் 'மாரி' சீரியல் நடிகை..

Deepthi kapil

'பாக்யலட்சுமி' சீரியலில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் இணைந்துள்ளார். 

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. கணவனால் கைவிடப்பட்ட பெண் தனி ஆளாக நின்று எப்படி குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதை. சந்தர்ப்ப சூழ்நிலையால் பாக்கியாவின் கோபி மீண்டும் தனது வீட்டிற்கு வருகிறார். கோபி வந்ததால் அவருடன் ராதிகாவும் அதே வீட்டிற்கு வருகிறார். 

Deepthi kapil

இப்படி சீரியலின் கதை பரபரப்பாக சென்று கொண்டு இருக்கையில் எழிலின் மனைவி ஜெனி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தவறி கீழே விழுகிறார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் ராதிகா ஜெனியை மருத்துவமனையில் அனுமதிக்கிறார். இதனால் பாக்யாவிற்கும் ராதிகாவிற்கும் இடையே பழைய நட்பு மீண்டும் துளிர் விடுகிறது. 

Deepthi kapil

ஆனால் கோபிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து அவரை வாட்டி வதைக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் 'மாரி' சீரியல் நடிகை தீப்தி கபில் இணைந்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் இணைந்துள்ளது சீரியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story