ராதிகாவை வீட்டை விட்டு துரத்தும் ஈஸ்வரி பாட்டி... 'பாக்யலட்சுமி' சீரியலில் புதிய திருப்பம் !

baakyalakshmi

ராதிகாவை கழுத்தை பிடித்து ஈஸ்வரி பாட்டி துரத்தும் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

பல அதிரடி திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருக்கிறது பாக்யலட்சுமி சீரியல். அடுத்தடுத்த பல பிரச்சனைகள் வர அதை எப்படி சரி செய்வது என்று புரியாமல் கோபி தவித்து வருகிறார்.  பாக்யா தனது வேலைகளை கவனித்துக் கொண்டு முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். 

 baakyalakshmi

 தினமும் குடித்துவிட்டு பிரச்சினை செய்யும் கோபி, தாய் ஈஸ்வரி வார்த்தைக்கு கட்டுப்பட்டு தனது வீட்டிலேயே இருக்கிறார். கோபி அங்கேயே இருப்பதால் ராதிகாவும் அங்கு சென்றுவிடுகிறார். இப்படி கதைக்களம் பல பிரச்சனைகளுடன் சென்றுக் கொண்டிருக்கையில் புதிய இணைப்பாக மயூவும் வந்துவிடுகிறார். இதனால் பாக்யலட்சுமி சீரியலில் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. 

baakyalakshmi

இந்நிலையில் இந்த வாரத்திற்கான எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.  ‌‌‌‌‌‌‌‌‌அதில் கிச்சனில் காபி போட்டுக் கொண்டிருக்கும் ராதிவை தரதரவென இழுத்து வந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளுக்கிறார். இதனால் வாசலில் நிற்கும் ராதிகா, கோபியிடம் விஷயத்தை கதறி அழுகிறார். கோபியும் தனது அம்மா ஈஸ்வரியிடம் இது குறித்து கேள்வி எழுப்புகிறார். ஆனால் ராதிகா வேணுமா, இல்லை நான் வேணுமா என்று கேட்கிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கோபி முழுக்கிறார். அதேநேரம் போலீசை வீட்டிற்கு அழைத்து வரும் ராதிகா அம்மா, கோபியின் மனைவிதான் ராதிகா. ஆனால் வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார்கள் என சொல்ல ராதிகாவை மீண்டும் வீட்டிற்கு செல்ல போலீசார் உதவி செய்கின்றனர். இதனால் பாக்யலட்சுமி சீரியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story