முடியல….. நான் என்ன சொன்னேன், நீங்க என்ன சொல்றீங்க…..- விளக்கம் கொடுத்த கோபி.

photo

பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலெட்சுமி’ தொடரிலிருந்து கோபி விலகுவதாக வெளியான செய்தி குறித்து அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

photo

விஜய் தொலைகாட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, ஒவ்வொரு சீரியலிற்கும் என தனிதனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் பாக்கியலெட்சுமி தொடரில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் சீரியல் பிரியர்களுக்கு பரிட்சயம். அதிலும் கோபி கதாபாத்திரம் பற்றி கூறவே வேண்டாம், இவர் பாக்கியவை பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்த சமயத்திலிருந்தே, இவர் எப்போது மாட்டுவார் என  காத்துகிடந்தனர் ரசிகர்கள்.

photo

தற்போது இரண்டாவது திருமணம் செய்து, பாடாய்பட்டு வருகிறார், ‘நல்லா வேணும்’ என ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வர, சீரியலிற்கு புது வரவாக பழனிசாமி எங்கின்ற கதாபாத்திரம் மூலமாக பிரபல நடிகர்  ரஞ்சித் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் பாக்கியவுடன், ஆங்கிலம் கற்றுதரும் வகுப்பில் இணைந்துள்ளார். தொடர்ந்து பாக்கியவிற்கு பக்கபலமாக இருந்து வரை மனம்விட்டு பாராட்டிவருகிறார். சீரியல் இப்படி செல்ல; கோபி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஞ்சித்தின் பழனிச்சாமி கேரக்டருக்கு சிறப்பான ஆதரவை ரசிகர்கள் அளிக்க வேண்டும் என்றும் தான் ஓய்வு எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அவர் இந்தத் தொடரிலிருந்து விலக போவதாக செய்திகள் வெளியானது.

photo

 இந்த நிலையில், நான் என்ன சொன்னேன் நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க என்பது போல கோபி விளக்கம் கொடுத்து வீடியோ பகிர்ந்துள்ளார், அதில், என்னுடைய பகுதி குறையும் என நான் சொன்னதை, தவறாக புரிந்து கொண்டீர்கள், நான் சீரியலை விட்டு விலகவில்லை என வீடியோ மூலமாக விளக்கம் கொடுத்துள்ளார்.
 

Share this story