பாக்கியவுக்காக குரல் கொடுக்கும் ராதிகா!- செம ட்விஸ்ட்.

photo

இல்லத்தரசிகளின் விருப்பமான தொடராக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலெட்சுமி தொடரில் யாருமே எதிர்பார்க்காத விதமாக செம ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது, அது தொடர்பான புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

photo

செழியன், மாலினி விவகாரம் ஜெனிக்கு தெரியவர கோபத்தில் வீட்டைவிட்டு குழந்தையுடன் வெளியேறுகிறார் ஜெனி. இதனால் குடும்பத்தில் பூகம்பம் கிளம்புகிறது பாக்கியாவுக்கு இந்த விஷயம் தெரிந்தும் மௌனம் காத்துள்ளார் என அனைவரும் பாக்கியவை குறிவைக்கின்றனர். பாக்கியவின் அத்தை அவரை வசைபாட அந்த சமயத்தில் சரியாகவரும் ராதிகா” எதுக்கு பாக்கியாவ திட்டுறீங்க.. தப்பு செஞ்சது செழியன், இப்படி செஞ்சா வீட்டுல பிரச்சனை நடக்கும்னு தெரிஞ்சி செஞ்ச செழியன திட்டுங்க’ என பாக்கியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க பாக்கியா உட்பட வீட்டில் உள்ள அனைவரும் மிரண்டு விடுகின்றனர்.

யாரும் எதிர்பார்க்காத விதமாக ராதிகா நடந்துக்கொண்டது கதையில் செம ட்விஸ்டாக அமைந்துள்ளது. தொடர்ந்து கதை எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story