சும்மா கெத்தா.. ஸ்டைலாக வந்திறங்கிய பாக்யா.. வாயை பிளந்த குடும்பத்தினர்.

bakiyalakshmi

'பாக்யலட்சுமி' சீரியலில் பாக்யா ஸ்டைலாக மாறியதால் குடும்பத்தினர் வியப்படைந்தனர். 

மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது பாக்யலஷ்மி சீரியல். கணவர் பிரிந்த நிலையில் தனது குடும்பத்தினருக்காக போராடும் பெண்ணின் கதைதான்‌ இந்த சீரியல். தற்போது சமையல் பிசினஸ் செய்யும் பாக்யா, அதன் மூலம் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுகிறார். 

bakiyalakshmi

தற்போதைய கதைப்படி பாக்யாவின் மருமகள் ஜெனியின் வளைக்காப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு உறவினர்கள் அனைவரும் வந்தபோது திடீரென கோபி, ராதிகாவுடன் அங்கு வருகிறார். இதனால் ஷாக்கான குடும்பத்தினர், உறவினர்களின் அவமானத்திற்கும் ஆளாகுகின்றனர். இதனால் கோபமடையும் எழில் கோபியுடன் சண்டௌ போடும் காட்சிகள் கடந்த சில நாட்களாக காட்டப்பட்டு வந்தது. 

bakiyalakshmi

இதையடுத்து பாக்யாவை ஸ்டைலாக மாற்ற அவரது மருமகள் ஜெனி முடிவு செய்கிறார். இதைத்தொடர்ந்து அழகு நிலையத்திற்கு பாக்யாவை அழைத்து செல்கின்றனர். அங்கு பேஷியல், ஹேர் கலரிங் ஆகியவை செய்தனர். பின்னர் பாக்யா மிகவும் ஸ்டைலிஷ்ஷாக மாறுகிறார். இதை பார்த்த குடும்பத்தினர் வியப்படையும் காட்சிகள் வெளியாகி உள்ளது. 


 

Share this story