அதிர்ச்சியில் ‘பாக்கியலெட்சுமி’: கேள்விக்குறியான அமிர்தா-எழில் வாழ்க்கை.

photo

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாஅகி வரும் தொடர் பாக்கியலெட்சுமி. இந்த தொடருக் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் பாக்கியலெட்சுமி தொடரில் அமிர்தாவின் முன்னாள் கணவன் குறித்த உண்மையை அறிந்த பாக்கியா அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் புரொமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

photo

இறந்து விட்டதாக நினைத்த அமிர்த்தாவின் முன்னாள் கணவரான கணேஷ் உயிருடன் வந்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் தனது மனைவி அமிர்தாவுக்கு மறுமணமானதை அறிந்து அவருடன் இணைந்து வாழ துடிக்கிறார். இந்த விவகாரத்தை கணேஷின் பெற்றோர் பாக்கியாவிடம் கூற அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார் பாக்கியா. தொடர்ந்து கணேஷால், எழில்- அமிர்தா வாழ்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

எழில் வாழ்க்கை இப்படி இருக்க செழியன்- மாலினி விவகாரம் அறிந்த பாக்கியா செழியனை இரவில் வெளியில் அனுப்பாமல் பார்த்துக்கொள்கிறார். அதுமட்டுமலாமல் செழியனும் மாலினியின் உறவிலிருந்து மீண்டு வர நினைத்தும் முடியவில்லை. தொடர்ந்து செழியனும் அவரது தந்தைப்போல இரண்டாவது திருமணம் செய்துக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story