'பாக்கியலெட்சுமி'யை புகழ்ந்து தள்ளிய அமைச்சர்- கண்ணீர் விட்ட ஈஸ்வரி.

photo

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் பாக்கியலெட்சுமி. ஏராளமான இல்லத்தரசிகள் இந்த தொடருக்கு ரசிகையாக உள்ளனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரொமோவில் பாக்கியா குடும்பம் அவரை நினைத்து பெருமை கொள்கிறது அதற்கான காட்சிகள் வெளியாகியுள்ளது.

பொருட்காட்சியில் கேன்டீன் கான்டிராக்டை பெற்ற பாக்கியா அதனை சிறப்பாக நடத்தி முடிக்கிறார். அவரை பாராட்டி அமைச்சர் அவருக்கு மாலை அணிவித்து, பாக்கியாவை புகழ்ந்து பேசுகிறார். அந்த பேட்டி டிவியில் ஒளிபரப்பாக அதை ஈஸ்வரி பார்க்கிறார். பாக்கியா பொருட்காட்சியில் கேன்டீன் நடத்துவதை எந்த விதத்திலும் ஏற்காத ஈஸ்வரி அமைச்சரின் பேட்டியை பார்த்ததும் கண் கலங்கி பாக்கியவை கட்டியணைத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறார்.

Share this story