சமையலில் சொதப்பி வசமாக மாட்டிக்கொண்ட பாக்கியா- நடக்கப்போவது என்ன?

photo

இல்லத்தரசிகளின் விருப்பமான தொடராக பரபரப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலெட்சுமியில், சமையலில் சொதப்பி பாக்கியா வசமாக மாட்டிக்கொள்ளும் காட்சிகள் அடுத்தடுத்து ஒளிபரப்பாக உள்ளது. 

photo

அதன்படி, நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சமைக்க செல்லும் பாக்கியா, அங்கு சமையலில் கவனம் செலுத்தாமல் இனியாவின் மதிப்பெண்னை அறிவதில் முனைப்புகாட்டி வந்ததால், சமையல் பொறுப்பை செல்வியிடம் ஒப்படைக்கிறார். ஆனால் செல்வி சமையலில் மெத்தனமாக இருந்து பாயசத்தை தீய விட்டுவிடுகிறார். இதனால் பெண் வீட்டார் தாங்களை அவமானப்படுத்த இப்படி உணவு போட்டதாக கூறி, மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீடாருக்கும் இடையே சண்டை நடக்கிறது. இந்த சம்மந்தமே வேண்டாம் என்ற அளவுக்கு பிரச்சனை பெரிதாகிறது. பாக்கியா எவ்வளவோ முயற்சி செய்தும் யாரும் கேட்பதாக இல்லை. அதுமட்டுமல்லமல் பாக்கியா மற்றும் அவருடன் சமைக்க வந்த அனைவரையும் தனி அறையில் அடைத்து வைத்து விடுகின்றனர்.

photo

இது ஒரு புறம் இருக்க இனியா 600க்கு 596 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக வந்ததை அறிந்து கோபி வாழ்த்து சொல்ல வீட்டிற்கு  செல்கிறார். ஆனால் அவர் பள்ளிக்கு சென்றதை அறிந்த கோபி ராதிகாவுடம் பள்ளிக்கு சென்று இனியாவை வாழ்த்தி கட்டியணைத்து கண்கலங்குகிறார். என் மகள் என அனைவரிடமும் அறிமுகம் செய்கிறார். சமையலில் சொதப்பி மாட்டிக்கொள்ளும் பாக்கியா! பாக்கியா இல்லாமல் பள்ளிக்கு தனியாக வந்த இனியா! அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

Share this story