குட்டையை குழப்பிய வர்ஷினி பர பரப்பான அடுத்த கட்டத்தில் ‘பாக்கிய லெட்சுமி’.

photo

இல்லத்தாரசிகளின் ஃபேவரட் சீரியலாக  வலம் வரும் பாக்கிய லெட்சுமி தொடர் தற்பொழுது அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்ல துவங்கியுள்ளது.or கோபி ராதிகா டிராக் செல்ல மறுபுறம் ஜெனி கர்ப்பமானதை குடும்பமே கொண்டாடி வருகின்றனர்.

photo

செழியன், ஜெனியை விழுந்து விழுந்து கவனிப்பதை பார்த்த எழில் கிண்டல் செய்கிறார். அதை பார்த்த ஒட்டுமொத்த குடும்பமுமே சிரித்து சந்தேஷமாக இருக்கின்றனர். அந்த சமயத்தில் வர்ஷினி வீட்டிற்கு வந்து ஸ்கோர் செய்து விட்டு செல்கிறார். வர்ஷினியை பாட்டிக்கு ரொம்பவே பிடித்து போக அவர் “வர்ஷினியை எங்களுக்கு பிடிச்சிருக்கு. அம்ரிதா கூட எங்களிடம் நடிக்கிற மாதிரி இருக்கு, ஆனால் இவ அப்படியில்லை” என சொல்கிறார். இதைக் கேட்டு எழில் ஆடிப்போகிறார்.

photo

மற்றொரு புறம் அம்ரிதா வீட்டுக்கு செல்லும் வர்ஷினி, “எழிலை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்”என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அவங்க குடும்பத்த  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எங்கப்பா கிட்ட பேசிட்டேன் என காரணங்களை அடுக்கி விட்டு கிளம்புகிறார். “இது உண்மையா இருக்காது” என அம்ரிதா கூறுகிறார்.

photo

கோபி ,பாக்கியா, ராதிகா கதைக்களம் ஒரு டிராக்கில் செல்ல எழில் ,வர்ஷினி, அம்ரிதா கதைக்களம் வேரொரு டிராக்கில் பயணிக்க துவங்கியுள்ளது, இப்படி பர பரப்பாக நகரும் பாக்கிய லெட்சுமியில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story