கெத்துக்காட்டும் 'பாக்கிய லெட்சுமி'……. மிரண்டுநிற்கும் கோபி – தரமான சம்பவம் வெய்டிங்!

photo

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகளுக்கு விருப்பமான தொடராக இருப்பது ‘பாக்கியலெட்சுமி’.  இந்த தொடரில் சூழ்நிலை காரணமாக கணவனை விவாகரத்து செய்து தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் பாக்கிய லெட்சுமி. குடும்பத்திற்காக சிறிய மசாலா கம்பெனி தொடங்கி இன்று கல்யாண ஆர்டர், கேண்டீன் காண்ட்ராக்ட் என அசுரவேகத்து வளர்ந்து வீட்டிற்கான பணத்தையும் பாக்கியா கோபியிடம் கொடுத்து ஒரு தனி ஆளாக ஒட்டு மொத்த குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.  

photo

குடும்பத்தில் நடக்கும் சிக்கல், பண பிரச்சனை என அனைத்தையும் சமாளித்து வரும் பாக்கியா, தற்போது ஆங்கிலம் கற்கவும் தொடங்கிவிட்டார். இந்த தொடரில் புது வரவாக பிரபல நடிகர் ரஞ்சித் பழனிசாமி எனுக் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். சீரியல் இப்படி செல்ல, தனது வீட்டின் வாசலில் நிற்கும் காரை அசால்டாக எடுத்து வீட்டின் உள் பார்க்கிங் செய்கிறார் பாக்கியா.

photo

இதனை பார்க்கும் கோபி, ‘என்ன பாக்கியாவா! காரை ஓட்டுரா’ என வியந்து பார்க்கிறார். பக்கியாவும் கோபியை இடிப்பது போல வந்து  கெத்தாக வீட்டின்உள் காரை பார்க் செய்கிறார்.  இது தொடர்பான புரொமோ வெளியாகி எபிசோட் மீதான எதிர்பார்பை அதிகரிக்க செய்துள்ளது. 

        

Share this story