கோபியை தொடர்ந்து பாக்கியலெட்சுமி வீட்டிலிருந்து வெளியேறிய அடுத்த நபர்.

photo

பாக்கிய லெட்சுமி தொடரில் அடுத்த வாரம் யாருமே எதிர்பார்க்காத பல திருப்பங்கள் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமான சீரியல் ‘பாக்கிய லெட்சுமி’.  இந்த சீரியலில் அனைவரும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக கோபியின் நடிப்பு அபாரம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பாக்கியா, கோபி, ராதிகா டிராக் ஒரு புறம் செல்ல, மற்றொரு புறம் ரித்விகா, எழில், வர்ஷினி டிராக் செல்கிறது.

photo

 இந்த சமயத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் பாக்கியா வீட்டில் நடக்க இருக்கிறது. அதாவது வகுப்பில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததால் இனியாவை கண்டித்த ஆசிரியர், பெற்றோரை அழைத்து வரும்படி கூறுகிறார். ஆனால் பயத்தில் இதை வீட்டிலிருந்து மறைக்கிறார் இனியா.  மறுதினம் அவரை வீட்டுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்ஆசிரியர்கள் .

photo

அதன் பின் தான் வீட்டில் உண்மையை சொல்கிறார். இதைக்கேட்டு வீட்டில் உள்ள எல்லோரும் அவரை கண்டித்து அடிக்க செல்ல, ‘ அப்பா இல்லனா என்ன எல்லாரும் அடிக்க வரீங்களா? நான் வீட்ட விட்டு வெளிய போறேன் ‘ என சொல்லி விட்டு வெளியில் செல்கிறார்.

இப்படியான பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது பாக்கிய லெட்சுமி.

Share this story