நடு காட்டில் தொலைந்துப்போன ‘ஈஸ்வரி’- துடித்துப்போன ‘பாக்கியலெட்சுமி’.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலெட்சுமி’ தொடருக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக தொடரில் வரும் கோபியின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம். கோபி, பாக்கியா இவர்களை பிரதானமாக வைத்தே கதை நகர்ந்த நிலையில் தற்போது கிளைகதைகள் துவங்கியுள்ளது.
அந்த வகையில் பாக்கியாவின் முதல் மகனான செழியன், தனது மனைவி ஜெனி பிரசவத்திற்காக தாய்வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வருகிறார். இரண்டாவது மகனான எழில் திருமணம் செய்துள்ள அமிர்தாவின் முதல் கணவர் இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அவர் உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். இருவரின் வாழ்கை என்னவாகுமோ என்ற கோணத்தில் கதை செல்ல பாக்கியாவின் மகளான இனியா தனது காலேஜ் புராஜெக்டுக்காக கொடக்கானல் செல்கிறார். அவருடன் பாக்கியா, ஈஸ்வரி, செல்வி என அனைவரும் செல்கின்றனர்.
செல்லும் வழியில் கார் பிரச்சனை, தங்குமிடம் பிரச்சனை என பல தடைகளை சமாளிக்கின்றனர். தற்போது பார்த்தால் காட்டுக்குள் ஈஸ்வரி பாட்டி தனியாக தொலைந்து விடுகிறார். அவரை பாக்கியா, இனியா, செல்வி என அனைவரும் வலைவீசி தேடி வருகின்றனர். பயந்துப்போன இனியா கோபிக்கு போன் செய்து நடந்ததை கூறுகிறார். தொடர்ந்து ஈஸ்வரி மீட்கப்பட்டாரா?, என்ன நடந்தது? என்பதை பார்க்கலாம்.