புத்தம் புதிய கதைக்களத்தில் ‘பாரதி கண்ணம்மா 2’.. புதிய ப்ரோமோ வெளியீடு !

BarathiKannamma 2

 ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இரண்டாவது சீசனின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிப்பரப்பான தொடர் ‘பாரதி கண்ணம்மா’. தனது கணவன் சந்தேகத்திற்கு ஆளான மனைவி எப்படி தனியாக வாழ்ந்து வாழ்க்கையில் ஜெயிக்கிறாள் என்பதுதான் இந்த சீரியலின் கதை. 

BarathiKannamma 2

சமீபகாலமாக சுவாரஸ்சியமில்லாமல் ஒளிப்பரப்பாகி வந்த இந்த தொடர் வரும் 5-ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இந்த சீரியல் முடிக்கப்பட்டதை அடுத்து பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது சீசன் வரும் 6-ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாக உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. 

BarathiKannamma 2

இரண்டாவது சீசனின் ஹீரோவாக சன் டிவி ரோஜா சீரியலில் நடித்த சிபு சூரியன் நடிக்கிறார். அவரது இன்ட்ரோ காட்சிகள் சீரியலில் காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று முதல் சீசனில் நடித்த வினுஷா தேவியே இரண்டாவது சீசனில் கண்ணம்மாவாக நடிக்கிறார். இவர்களுடன் புதிய நட்சத்திரங்கள் இந்த சீரியலில் இணைந்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் ஒளிப்பரப்பாக உள்ள இந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

Share this story