பிக்பாஸ் சீசன்7: ஐஷூ குறித்து உருக்கமாக பதிவிட்ட அவரது தாய்.

இந்த பிக்பாஸ் சீசன் கன்டென்ட்க்கு குறையில்லமல் அடிதூளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் போட்டியாளர் ஐஷூவின் தாய் அவர் குறித்த உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை, நட்பு, காதல் எல்லாம் சாதாரண ஒரு விஷயம் தான். அந்த வகையில் இந்த சீசனில் காதல் புறாக்களாக வலம்வரும் ரவீனா-மணியை தொடர்ந்து தற்போது நிக்சனும்-ஐஷூவும் தங்களது காதலை துவங்கியுள்ளனர். இவர்களது ரொமான்ஸ் குறித்து பலரும் பல வித கமெண்ட்டுகளை இணையத்தில் பதிவிட்டு வரும்நிலையில் தற்போது ஐஷூவின் தாய் ஷைஜி தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது” நீ நீயாகவே இரு ஐஷூ, இந்த ஐஷூ வேண்டாம், நாங்கள் எங்கள் ஐஷூவை பார்க்க விரும்புகிறோம் எது உண்மை, பொய் என்பதை நீ அறிவாய் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.