அடக்கடவுளே!... பிக்பாஸ் அக்ஷராவின் தாய் திடீர் மரணம்- ஆறுதல் கூறும் ரசிகர்கள்.

photo

பிக்பாஸ் சிசன்5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் அக்ஷரா. இவர் தனது தாய் மரணமடைந்த செய்தியை  தனது சமூகவலைதல பக்கத்தின் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

photo

மாடல் அழகியும், காசு மேல காசு, பில் கேட்ஸ்(கன்னடம்) உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகையுமானவர் அக்ஷரா ரெட்டி இவர் விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவரானார்.  அந்த சீசனில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், குறிப்பாக இவர் வருணுடன் சற்று நெருக்கமாக இருந்தார். அதனால் கடுமையாக கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் நாங்கள் நண்பர்கள்தான் என் கூறிய அக்ஷரா, வெளியில் வந்த பின்னரும் அந்த நட்பை தொடர்கிறார்.

photo

இந்த நிலையில் தற்போது தனது சமூகவலைதள பக்கத்தில் அவரது தாய் இறந்த தகவலை கூறியுள்ளார். சிறுநீரக பிரச்சனை காரணமாக டயாலிசிஸ் செய்துவந்த அவரது தாய் கௌரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கடந்த அக்டோபர் 29ஆம் தேதி காலமானதாக கூறியுள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அக்ஷராவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

Share this story