தரமான சம்பவம் வெயிட்டிங்….- மாயவை ரோஸ்ட் செய்த தினேஷ்!

photo

பிக்பாஸ் சீசன்7 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது இணையத்தில் பற்றி எரிந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது வெளியான புரோமோ அட தரமான சம்பவம் இருக்கும் போலயே என ரசிகர்களை நினைக்க வைத்துள்ளது.

photoஅதாவது பிக்பாஸ்ஸின் புதிய டாஸ்காக கமெண்டுகளை பதிவிட்டு அதை இந்த வீட்டில் யார் யாரை பற்றி கூறியது எனவும் எதற்கு அப்படி கூறினார்கள் எனவும் ஒரு டாஸ்க் வைத்துள்ளார். அதன்படி முதல் புரொமோவில் நிக்சன், விணுஷா பற்றி கூறிய கமெண்ட் இடம் பெற்றது. தொடர்ந்து வெளியான புரொமோவில் மாயா, பூர்ணிமா, ஜோவிகாவின் கமெண்டுகள் இடம் பெற்றது, அடுத்து அர்ச்சனா குறித்து பூர்ணிமா பேசியது வந்தது. கடைசியாக பிராவோ குறித்து மாயா கூறியது வந்துள்ளது. அதாவது பிராவோ கீழ இருந்து மேல பார்ப்பதாக மாயா ஐஷூவிடன் கூறியுள்ளார்.

நான் எப்போ அப்படி பார்த்தேன் என மாயாவிடம் கேட்க இது சும்மா காமெடிக்கு என மாயா கூறுகிறார். உடனே தினேஷ் வர்றவன்லாம் உன்ன அப்படிதான் பாக்குறானா? என மாயாவிடம்  கேட்கிறார். அதற்கு மாயா கேரக்டர பத்தி தப்பா பேசாதீங்க என தினேஷிடம் சண்டைக்கு செல்கிறார். இப்படியாக இந்த புரொமோ வெளியாகியுள்ளது.

Share this story