முதல் முறையாக காதலியை அறிமுகம் செய்த 'பிக்பாஸ் பிரதீப்'.

பிரதீப்

பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமான பிரதீப் தற்போது முதல் முறையாக தனது காதலி யார் என்பதை வெளியிட்டுள்ளார்.

அருவி, டாடா, யாழ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரதீப். தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். இந்த நிலையில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீசனில் அதிகம் பேசுபொருளானது பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட விவகாரம்தான். இணையத்தில் பலரும் பிரதீப்பிற்கு ஆதரவு கரம் நீட்டினார்கள். அதனாலேயே பிரதீப் மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்த நிலையில் பிரதீப் தற்போது முதல் முறையாக தனது காதலியை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

பிரதீப்

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி தனது யூடியூப் சேனலில் தினமும் பிக்பாஸ் குறித்து தனது விமர்சனத்தை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று ரிவ்யூ செய்த போது பிரதீப் நிகழ்ச்சிக்கு தனது கேர்ள் பிரண்டுடம் கலந்துகொண்டுள்ளாதாக தெரிவித்தார். அவரது முகத்தையும் நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Share this story