பிக்பாஸ் சீசன்7: வெளியேற்றப்பட்ட பிரதீப் போட்ட முதல் பதிவு வைரல்!

photo

பிக்பாஸ் சீசன் 7 கடந்த மாதம் துவங்கி, விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் வழக்கமான சீசங்களை விட சற்று மாறுபட்டு உள்ளது. காரணம் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டதுதான். இந்த நிலையில் நேற்று பிரதீப் சக போட்டியாளரிடம் தகாதவார்த்தைகள் பேசிய விவகாரத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

photo

தொடர்ந்து வெளியில் நடிகர் கவின், தொகுப்பாளர் பிரியங்கா, அமீர், பாவ்னி மற்றும் பிரதீப்பின் ஆதரவாளர்கள்  என பலரும் அவருக்கு ஆதாரவும், மறுபுறம் எதிர்ப்பும் உள்ளது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் வெளியில் வந்து அவரது சமூக வலைதளத்தில் ‘ பிக்பாஸ் 7லிருந்து நான்பெற்ற கோப்பைகள்’ என அவர் அங்கு டாஸ்க் சமயத்தில் வாங்கிய லைக்ஸ், டிஸ்லைக்ஸ், ஸ்டார் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Share this story