இந்த வாரம் டபுள் எவிக்ஷன்- அதிரடியாக களமிறங்கும் 5 போட்டியாளர்கள்.

photo

நாளுக்கு நாள் பிக்பாஸ் வீடு பற்றி எரியும் நிலையில், மேலும் சூடு பிடிக்க வைக்க பிக்பாஸ் டீம் 5 போடியாளர்களை புதிதாக களமிறக்க உள்ளனர். அதுமட்டுமலாமல் அதிரடியாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்க உள்ளது.

photo

வழக்கமான சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பிக்பாஸ் வீடு, ஸ்மால்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு ஆட்டம் கலைகட்டி, சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் சென்றுவருகிறது. முதல் வாரத்தில் அனன்யா, தொடர்ந்து பவா செல்லதுரை, விஜய் வர்மா என அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்க உள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டிற்கு எதற்கு வந்தோம் என்பதை மறந்து பிக்னிக் வந்தது போல சுற்றிதிரியும் வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரும் வெளியேற உள்ளதாக தகவல் வந்துள்ளது.

photo

மேலும் அதிரடியாக, 5 போட்டியாளர்கள் உள்ளே நுழைய உள்ளனர். அதில் ரக்ஷிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், விஜே அர்ச்சனா, ஆர்ஜே பிரேவோ, அன்ன பாரதி மற்றும் கானா பாலா ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Share this story