பிக்பாஸ் சீசன்7: இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்!.... கொந்தளிக்கும் ரசிகர்கள்.

photo

 பிக்பாஸ் சீசன்7 நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கி வருகிறது. யார் டைட்டில் வின்னராக போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

பிக்பாஸ் வீட்டுக்குள் 10 போட்டியாளர்கள் உள்ளனர். அதில் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா இருவரும் டிக்கெட் டூ ஃபினாலே போட்டிக்கான வாய்ப்பை இழந்தனர்.  மற்ற8 போட்டியாளர்களும் விளையாடிய நிலையில் அதில் 10 பாயிண்ட்டுகள் பெற்று விஷ்ணு முதலித்தில் உள்ளார். தொடர்ந்து 7 பாயிண்ட்டுகள் பெற்று மணி, 4 பாயிண்ட்டுகள் பெற்று நிக்சன், பூர்ணிமா, மாயா ஆகியோர்  அடுத்து உள்ளனர். இறுதியாக 3 பாயிண்ட்டுகள் பெற்று விசித்ரா இறுதியாக உள்ளார்.

இந்த நிலையில் இந்த வாரம் மாயா, ரவீணா, விஜய் வர்மா, நிக்சன், தினேஷ், மணி விஷ்ணு ஆகியோர் நாமினேஷனி உள்ளனர். அதில் ரவீணா தான் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாயா தான் வெளியேறுவார் என நினைத்த ரசிகர்களுக்கு ரவீணா எலிமினேஷன் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் கோபமான ரசிகர்கள் யாரை ஜெயிக்க வைக்க இப்படி செய்கிறீர்கள் என பிக்பாஸை வசைபாடி வருகின்றனர்.

Share this story