பிக்பாஸ் சீசன்7: ‘வீட்டுக்கு போறேன்… ‘கதறி அழும் ஜோவிகா!

photo

பிக்பாஸ் சீசன்7ல் இன்றைய நாளுக்கான புரொமோவில் வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா வீட்டுக்கு போறேன் என் அம்மா கூடவே நான் இருக்கேன் என கதறி அழுதது வெளியாகியுள்ளது.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 61 நாட்கள் கடந்து விட்ட நிலையில் போட்டியாளர்களுக்குள் கடுமையான போட்டி நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்து விசித்ரா, ஜோவிகா, மணி, தினேஷ், அனன்யா, பூர்ணிமா, கூல் சுரேஷ், விக்ரம் ஆகியோர் எவிக்ஷனுக்கு தேர்வாகியுள்ளனர்.இந்த நிலையில் இன்று வெளியான புரொமோவில் ஜோவிகா ‘வீட்டுக்கு போறேன் என் அம்மா கூடவே நான் இருக்கேன், கேங்.. கேங்… சொல்லி கடுப்பேத்துறாங்க..’ என ரவீனா சொன்னதாக கூறுகிறார். ரவீனா’ நான் உங்கள பாத்து சொல்லல’ என கூறுகிறார். இப்படியாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது.

Share this story