உச்சகட்ட கோபத்தில் பரணி எடுக்கும் முடிவு.. அண்ணா சீரியல் அப்டேட்

உச்சகட்ட கோபத்தில் பரணி எடுக்கும் முடிவு.. அண்ணா சீரியல் அப்டேட் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி ஷண்முகத்திற்கு ஆபரேஷன் செய்து உயிரை காப்பாற்றினர். கண் விழித்த ஷண்முகம் கப்பை வாங்க போக வேண்டும் என்று சொல்லினார். சண்முகத்தை கபடி போட்டி நடந்த இடத்திற்கு அழைத்து செல்ல அவன் ஜெயித்ததற்காக கப்பு வாங்கி கொண்டு பிறகு வீட்டிற்கு வருகிறான். தங்கைகள் ஆரத்தி எடுத்து சண்முகத்தை வீட்டிற்குள் அழைத்து செல்ல அவன் கீழே படுக்க போக பரணி அவனை மேலே பெட்டில் படுக்க சொல்லி படுக்க வைக்கிறாள். 

உச்சகட்ட கோபத்தில் பரணி எடுக்கும் முடிவு.. அண்ணா சீரியல் அப்டேட் 

அதன் பிறகு கோபமாக வெளியே வரும் பரணி ஷண்முகத்தோட இந்த நிலைமைக்கு காரணமான முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை சும்மா விட கூடாது, கமிஷனர் ஆபிஸ் போய் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்று கூறுகிறார்.  அதற்கு பாக்கியமும், வைகுண்டமும் பதறுகின்றனர். ஷண்முகம் உயிர்பிழைத்ததே போதும், இனி பிரச்சனை வேண்டாம் என கூறுகின்றனர். 
 

Share this story