‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கிளைமேக்ஸ் இதுதான்; தொடர்ந்து வெளியாகவுள்ளது சீசன் 2.

photo

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பல எப்பிசோடுகளாக  ஒரே கதையை வைத்து ஒப்பேத்தி வருவதாக சீரியல் ரசிகர்கள் மத்தியில் பரவலாக ஒரு ஆதங்கம் உள்ளது. அதனாலேயே பலருமே சீரியலின் கிளைமேக்ஸ் எப்போது வரும் என எதிர்பார்த்து காத்துள்ளனர். அந்த வகையில் சீரியலின் கிளைமேக்ஸ் இதுதான், என தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதாவது டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் மூலமாக ஹேமா, லெட்சுமி இருவரும் தனது குழந்தைதான் என அறியும் பாரதி, கண்ணமாவிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வழியாக தனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து விடுகிறார். நான்கு பேரும் காரில் ஒன்றாக பயணிக்கின்றனர். அப்பொழுது ஹேமா தானும் கார் ஓட்டுவதாக பாரதியிடம் அடம் பிடித்து தனது தந்தையுடன் சேர்ந்து கார் ஓட்டுகிறார். மகிழ்சியாக சென்ற அந்த பயணம் விபத்தில் முடிகிறது. அந்த விபத்தில் ஹேமா, லெட்சுமி காயங்களுடன் தப்பிக்க, பாரதியும் கண்ணம்மாவும் எதிர்பாராத விதமாக உயிரிழக்கின்றனர்.

photo

தொடர்ந்து, பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாம் பாகமும் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சீசனில் ஹேமாவும், லெட்சுமியும் வளர்ந்து அவர்கள் வாழ்வில் நடக்கும் விஷயங்கள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story