உண்மையை தெரிந்துக்கொண்ட ஹேமா.. சோகக்கடலில் ‘பாரதி கண்ணம்மா’ !

BarathiKannamma

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களை சோகக்கடலில் மூழ்க்கடித்து வருகிறது. 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது மீண்டும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு காரணம் தற்போது இந்த சீரியல் முடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் க்ளைமேக்சை நெருங்கும் காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. 

BarathiKannamma

கணவரை பிரிந்த ஒரு பெண் எப்படி தனியாக வாழ்கிறாள் என்பதுதான் இந்த சீரியலின் கதை. தற்போதைய கதைப்படி கண்ணம்மாவிற்கு இரண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் லஷ்மி என்ற குழந்தை கண்ணம்மாவிடம் வளர்ந்து வருகிறது. ஆனால் மற்றொரு குழந்தையான ஹேமா தான் யாரென்று தெரியாமல் பாரதியிடம் வளர்ந்து வருகிறார்

BarathiKannamma

ஆனால் தற்போது தான் யார் என்ற உண்மை ஹேமாவிற்கு தெரிந்துவிடுகிறது. இதனால் தனது அம்மா கண்ணம்மாவிடமே தான் செல்லவிருப்பதாக பாரதியிடம் உருக்கமாக ஹேமா பேசுகிறார். இது தொடர்பான எபிசோடு கடந்த இரண்டு நாட்களாக ஒளிப்பரப்பாகி வரும் நிலையில் அதில் காட்டப்படும் காட்சிகள் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. அதனால் அடுத்து வரும் எபிசோடுகள் ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தும் என தெரிகிறது. 


 

Share this story