விரைவில் ‘பாரதி கண்ணம்மா 2’... ஹீரோவாகும் ரோஜா சீரியல் நடிகர் !

bharathi kannamma

‘பாரதி கண்ணம்மா’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் டாப் சீரியலாக இருந்த 'பாரதி கண்ணம்மா', ஒரே மாதிரியான கதைக்களத்தால் பார்வையாளர்களின் வரவேற்பை இழந்தது. அதனால் சீரியலை சுவாரஸ்யமாக்க அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது. பாரதியும், கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என்பது இந்த சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரே விஷயம். 

bharathi kannamma

ஆனால் அதை விறுவிறுப்பாக சொல்லாமல் இழுத்து கொண்டிருந்தார்கள். டிஆர்பியும் இல்லாததால் சீரியலை எப்படியோ இந்த வாரத்துடன் முடிக்கவுள்ளனர். இந்த சீரியல் விறுவிறுப்பு குறைந்ததற்கு காரணம் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷ்னி விலகியதும், திரைக்கதையை மாற்றதததும் தான். 

bharathi kannamma

இந்நிலையில் புதிய கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் சீசன் 2-வை தொடங்க இயக்குனர் முடிவு செய்துள்ளாராம். இந்த சீரியலின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியலின் கதாநாயகனாக சிபு சூரியன் நடிக்கவுள்ளார். இவர் சன் டிவியில் சூப்பர் ஹிட்டடித்த ‘ரோஜா’ சீரியலில் நடித்தவர். அதேபோன்று கதாநாயகியாக வினுஷா தேவி நடிக்கவுள்ளார். விரைவில் இந்த சீரியலின் ஒளிப்பரப்பு தொடங்கவுள்ளது. 

Share this story