வெண்பா குறித்த உண்மையை போட்டு உடைத்த அஞ்சலி.. ஷாக்காகி நின்ற பாரதி

bharathi kannamma

 வெண்பா குறித்த உண்மையை அஞ்சலி கூறியதால் பாரதி அதிர்ச்சியில் உறைந்த காட்சிகளின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

bharathi kannamma

பாரதி கண்ணம்மா சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி விவாகரத்து கேட்டு பாரதிக்கு கண்ணம்மாவும் 6 மாத சேர்ந்து வாழ வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் பாரதி, வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்து வீட்டிற்கு வருகிறார். ஆனால்  கண்ணம்மாவுடன் ஒன்றாக வாழ எந்த முடிவும் எடுக்காமல் இருந்த பாரதி திடீரென கண்ணம்மா வீட்டிற்கு செல்ல உள்ளதுபோல் ப்ரோமோ வெளியானது.

bharathi kannamma

இது ஒருபுறம் இருக்க வில்லி வெண்பாவின் சுயரூபத்தை காட்டும் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தான் கர்ப்பமாக இருந்த காலத்தில் வெண்பா சில மாத்திரைகளை கொடுத்ததாகவும், அந்த மாத்திரைகளை நான் சாப்பிடவில்லை என்றாலும், அது என்னையும், என் குழந்தையும் கொல்ல சதி கொடுத்த மாத்திரை என்று பரபரப்பான விஷயத்தை கூறுகிறார். 

bharathi kannamma

இதை கேட்ட அகில், அஞ்சலி சொல்வதை வைத்து பார்த்தால் வெண்பாவின் துரோகம் புரிகிறது. அஞ்சலியின் பிரச்சனை தெரிந்தவுடன் என்னுடன் சொல்லியிருக்கணும். இல்லையென்றால் உன்னிடமாவது சொல்லி இருக்கவேண்டும் என்று பாரதியிடம் கூறுகிறார். இதையொல்லம் கேட்கும் பாரதி அதிர்ச்சியில் உறையும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

Share this story