முடிவிற்கு வரும் பாரதி கண்ணம்மா……நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்.

பாரதி

பாரதிகண்ணம்மா சீரியலில் பல வருடங்களாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த அந்த தருணம் விரைவில் வர இருக்குறது. பாரதி எடுத்த  டிஎன்ஏ டெஸ்ட்டின் ரிசல்ட் வரவுள்ளது.

பாரதி

பாரதி கண்ணம்மா சீரியலை பொருத்த வரை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக தற்சமயம் கதை ஒன்றும் இல்லை, பாரதியும் கன்ணமாவும் சேர்ந்தாலே போதும் சீரியல் முடிந்து விடும், ஆனால் ‘ அது எப்பதான் நடக்கும்னு தெரியல ‘ என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.  தற்பொழுது இருவரும் சேருவதற்கான சூழல் நிலவி வருகிறது.

பாரதி  

ஒரு புறம் ரோகித்தை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மண்டபத்திலிருந்து தப்பி சென்ற வெண்பா, பாரதியை திருமணம் செய்ய பொன்னியம்மன் கோவிலுக்கு செல்கிறார். மறு புறம் இந்த திருமணத்தை நிறுத்த ஒரு படையோடு செல்லும் கண்ணம்மா. டி.என்.ஏ ரிசல்ட் வராததால் குழம்பி நிற்கும் பாரதி ‘சரி கோவிலுக்கு போவோம் ,அதற்குள்ள ரிசல்ட் வந்துடும்’ என அவரும் செல்கிறார்.

பாரதி

இறுதியில் என்ன நடக்க போகிறது இந்த கல்யாணத்தை கண்ணம்மா நிறுத்துவாரா? டி.என்.ஏ ரிசல்ட் வருமா? வெண்பாவின் நிலை என்ன? எல்லாவற்றிற்கும் விடையாக வரவிருக்கிறது அடுத்தடுத்த எப்பிசோடுகள்.என்னதான் நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story