சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் பாவனி?

சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் பாவனி?

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை பாவனி. தற்போது, மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் அவர் நடிக்கவுள்ளதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் பாவனி?

இவர், ரெட்டை வால் குருவி, ராசாத்தி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சக போட்டியாளர் அமீருடன் காதல் ஏற்பட்டதால், அமீரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் பாவனி.

சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் பாவனி?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த தொடரிலும் நடிக்காத பாவனி, அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார். தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் நடிக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்று அவர் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Share this story