ஒரு பெண் வாழ்க்கையை இப்படி பண்ணாதீங்க.. பிரியங்கா சர்ச்சை பற்றி கொந்தளித்த பிக் பாஸ் நிரூப்
குக் வித் கோமாளி செட்டில் பிரியங்கா மற்றும் மணிமேகலை ஆகியோர் இடையே நடந்த சண்டை பற்றிதான் தொடர்ந்து இணையவாசிகளும் நெட்டிசன்களும் பேசி வருகின்றனர். இரண்டு தரப்புக்கும் ஆதரவாக பல பிரபலங்களும் கருத்து கூற தொடங்கி இருக்கின்றனர்.பிரியங்கா ஏற்கனவே பிக் பாஸ் ஷோவில் சந்தித்த ட்ரோல்களை விட இந்த முறை அதிகம் விமர்சனத்தை சந்தித்து வருகிறார். விஜய் டிவியில் கேங் சேர்த்துக்கொண்டு பிரியங்கா செயல்படுகிறார் என ஒரு தரப்பினர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவுக்கு நெருக்கமான நண்பராக இருந்த நிரூப் நந்தகுமார் தற்போது காட்டமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.பணம் சம்பாதிப்பதற்காக சிலர் பரியங்கா பற்றி மிகவும் மோசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் எனவும், வியூஸ் பெறுவதற்காக பொய்கள், personal attack, ஆதாரமில்லாத கற்பனைகளை பரப்பி கொண்டிருகிறார்கள்."ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி செய்து பணம் சம்பாதிக்கணுமா" என நிரூப் கேட்டிருக்கிறார்.