உங்க வேலையை ஆரம்பிச்சீட்டீங்களா ?.. மகேஸ்வரியிடம் மீண்டும் முட்டிக்கொண்ட அசீம் !

bigboss 6

 மகேஸ்வரியிடம் அசீம் மீண்டும் முட்டிக்கொண்ட ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய தினத்திற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியானது. அதில் விஜே மகேஸ்வரி மீண்டும் என்ட்ரி கொடுக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து சேக்ரிஃபைல்ஸ் 2.0 என்ற புதிய டாஸ்க்கை ஹவுஸ்மேட்டுகளிடம் அறிவிக்கிறார் மகேஸ்வரி. 

bigboss 6

அதில் ஹவுஸ்மேட்டுகள் அனைவரும் கலந்து பேசி ஒரு சேக்ரிஃபைல்ஸ் டாஸ்க்கை உருவாக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதன்படி விக்ரமனுக்கு ஒரு லைடு முழுவதும் கிரீன் சேவ் செய்யவேண்டும் என்று தனலட்சுமி கூறுகிறார். அடுத்து அசீம், சாரி அல்லது சுடிதார் ஆகிய இரண்டில் ஒன்றை போடவேண்டும் என கூறுகிறார். 

bigboss 6

இதை கேட்ட அசீம், வீட்டிற்கு வந்தவுடனேயே உங்க வேலையை ஆரம்பிச்சீட்டீங்களே என மகேஸ்வரிரை பார்த்து கேட்கிறார். வீட்டிற்கு வந்ததே உங்களுக்கு டாஸ்க் கொடுக்கதான் என்று மகேஸ்வரி சொல்ல, இப்படி பேசியதால் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு போனீங்க என்பதை மறுக்காதீர்கள் என்று அசீம் கூறுகிறார். இப்படி இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொள்ளும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. 


 

Share this story