‘நான் சொன்னா எல்லாமே காலி’- பஞ்சாயத்துக்கு வந்த ஜோடி புறாக்களின் விவகாரம். ​​​​​​​

photo

பிக்பாஸ் சீசன்7 வழக்கமான சீசன்களை ஓவர்டேக் செய்து ஹைஸ்பீடில் பறந்து வருகிறது. அதற்கு பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது, பாடி ஷேமிங் பஞ்சாயத்து, பெண்கள் பாதுகாப்பு, புது புது காதலர்கள், புல்லி கேங் என பல காரணங்கள் இருக்கலாம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள புரொமோ மணி, நிக்சன் குறித்து வந்துள்ளது.

நீதிமன்றம் டாஸ்கில், மணி நிக்சன் மீது புகார் கொடுத்துள்ளார், அதாவது ‘ரவீனாவின் வளர்ச்சிக்கு தான் தடையாக இருப்பதாக நிக்சன் கூறியதை மணி குறிப்பிட்டு, அதேப்போல ஐஷூவின் வளர்ச்சிக்கு நிக்சன் தடையாக இருப்பதை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும்.’ என கூறுகிறார்.  அதற்கு பதில் கூறும் நிக்சன் ரவீனாவை பாதுகாக்கும் நோக்கத்தில் மணி ஒன்று செய்வதைப்போல நான் ஐஷூவுக்கு செய்கிறேன் என கூறுகிறார். இதனை கேட்ட மணி ஐஷூ இது குறித்து எங்களிடம் தனியாக வந்து பேசியதாகவும் நான் வாய் திறந்தால் எல்லாம் காலி எனவும் மணி கூருகிறார். இந்த புரொமோ எபிசோடின் மீதான எதிர்பார்பை கூட்டியுள்ளது.

Share this story