காபியால் கலவரமான பிக்பாஸ் வீடு.

photo

பிக்பாஸ் சீசன் 7 இம்மாதம் துவக்கத்தில் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் ஒரு பஞ்சாயத்து, எப்பொழுதும் சண்டை என இந்த சீசன் அனல் பறக்கிறது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள புரொமோவில் விஷ்ணு மற்றும் பூர்ணிமா இடையே காபியால் சண்டை வந்தது தெரிகிறது.

photo

பிக்பாஸ்சின் இந்த வார கேப்டனாக யுகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமால் பாஸ் வீட்டுக்கு மாயா, சரவண விக்ரம், பூர்ணிமா, விஷ்ணு, பிரதீப், விணுஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டு வேலைகளை சுமால் பாஸ் போட்டியாளர்கள் தான் செய்ய வேண்டும். உணவு, காபி, ஸ்நாக்ஸ் என அனைத்தும் செய்ய வேண்டும்.

தற்போது வந்துள்ள புரொமோவில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ரவீனா, சுமால் பாஸ் வீட்டில் உள்ள பூர்ணிமாவிடம் காபி கேட்க அதனை செய்ய அவர் மறுக்கிறார். இதனால் விஷ்ணு கோபமாக நீ பர்சனலா டார்கெட் பண்ற என பூர்ணிமாவிடம் சண்டையிடுகிறார். அதற்கு பூர்ணிமா நீ போய் பண்ணு என கூற. நீதான் இருக்குறதுலே ஒஸ்ட் என விஷ்ணு கூறுகிறார். இப்படியாக வெளியாகியுள்ளது இந்த புரொமோ.

Share this story