பிக்பாஸ் சீசன்7: வைல்ட் கார்டு எண்ட்ரி யார் தெரியுமா?

PHOTO

பிக்பாஸ் சீசன் 7 இம்மாதம்  முதல் நாள் துவங்கியது. கோலாகலமாக துவங்கிய இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்து ரணகளம் போர்களமாக சென்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக யார் உள்ளே செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதன்படி, கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, மணி, பிரதீப், நிக்சன், வினுஷா, அக்ஷயா, ஜோவிகா, ஐஷு, விஷ்ணு, மாயா, சரவன விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா, விஜய் என 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சீசனில் முதல் ஆளாக அனன்யா வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து உடல் நல பிரச்சனையால் எழுத்தாலர் பவா செல்லதுரை வெளியேறினார். தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

photo

கடந்த சீசங்களை விட இந்த சீசன் கடௌம் போட்டி, சண்டை என தினம் தினம் பஞ்சாயத்தாக உள்ளது. இந்த நிலையில் இரண்டு வார ஆட்டத்தை பார்த்து விட்டு வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக  பாடகர் கானா பாலா செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Share this story