திடீரென மாலை கழுத்துமாய் பிக்பாஸ் ஜூலி.. தீயாய் பரவும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி !

julie

பிக்பாஸ் ஜூலி மாலையும் கழுத்துமாய் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அனைவரிடமும் பிரபலமானவர் ஜூலி. தனக்கு கிடைத்த பிரபலத்தையடுத்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆரம்பத்தில் ரசிகர்கள் ஆதரவோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடிய ஜூலிக்கு, இறுதியில் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது. 

Julie

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும், அதை பாசிட்டிவாக மாற்றி சினிமா படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதோடு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சர்ச்சைகளிலும் சிக்கி விடுகிறார். இதனால் ஜூலியை ரசிகர்கள் வறுத்தெடுத்து விடுகின்றனர். 

Julie

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா வாய்ப்பு பெரிதாக இல்லாததால் விஜய் டிவி சீரியலில் இணைந்தார். அந்த வகையில் பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வரும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜூலி மாலையும் கழுத்துமாய் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஜூலிக்கு திருமணமாகிவிட்டதா என கேள்வி வருகின்றர். ஆனால் அந்த புகைப்படம் சீரியல் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டது என பின்பு தெரிய வந்துள்ளது. 

Share this story