பாவ்னியுடன் திருமணம் எப்போது ?... ஓபனாக பேசிய பிக்பாஸ் அமீர் !

ameer and pavni

பாவ்னியுடன் எப்போது திருமணம் என்பதை பிக்பாஸ் அமீர்  தெரிவித்துள்ளார். 

பிரபல நடன இயக்குனராக இருப்பவர் அமீர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5வது சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்தார்‌. அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வந்த அமீர், அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட பாவ்னியை காதலித்து வந்தார். இதனால் இந்த ஜோடி பிக்பாஸில் மிகவும் பிரபலமானது. 

ameer and pavni

இதையடுத்து பிக்பாஸில் இருந்து வெளியேறிய அவர்கள் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டனர். அங்கு இந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தனர். இது அவர்களுக்கிடையே உள்ள காதலை உறுதிப்படுத்தியது. அதன்பிறகு 'துணிவு' படத்திலும் கணவன், மனைவியாக நடித்தனர். 

அதனால் அமீர் - பாவ்னி ஜோடி எப்போது திருமணம் செய்துக்கொள்வார்கள் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் அமீர் மற்றும் பாவ்னி கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய பாவ்னியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கு விரைவில் திருமணம் செய்துக்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்றார். பின்னர் பேசிய அமீர், நிச்சயம் நாங்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்வோம். அதற்கு ஒரு வரும் கால அவகாசம் தேவைப்படுகிறது. ஏனென்றால் சினிமாவில் சாதிக்க வேண்டிய நிறைய உள்ளதால் அதற்கான அவகாசம் தான் அந்த ஒரு வருடம் என்று கூறினார். 

Share this story