தில்லாலங்கடி வேலை செய்து கம்பிநீட்டிய பிக்பாஸ் அபிநய் மனைவி – தேடுதல் வேட்டையில் போலீஸ்.

photo

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர், பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்  பேரனான அபிநய். அந்த சீசனில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். தொடர்ந்து இவர் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்ததாக பல தகவல்கள் பரவி பின்னர் வதந்தி என தெரிய வந்தது. இந்த நிலையில் அபிநய்யின் மனைவியை போலிசார் மோசடி வழக்கு உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

photo

அதற்கு காரணம் அபிநய்யின் மனைவி அபர்ணா தமக்கு பழக்கமான மஞ்சு என்பவருடைய மகளுக்கு மருத்துவம் படிக்க சீட் வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் கேட்டு அதில் 5 லட்சத்தை முன்பணமாக பெற்றுள்ளார். மீதி தொகையை கல்லூரியில் சேர்ந்ததும் கொடுத்துவிடலாம் என கூறியுள்ளார். தொடர்ந்து மருத்துவ சீட்டு கிடைத்து விட்டதாக கூறி சான்றிதழ் ஒன்றை அபர்ணா அனுப்பி உள்ளார். அதனை பெற்றுக்கொண்டு தன்னுடைய மகளை அந்த மருத்துவ கல்லூரியில் சேர்க்க சென்ற போதுதான் அந்த சான்றிதழ் போலி என தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சு, அபர்ணாவின் துணிகடைக்கு சென்று கேட்டுள்ளார்.  

photo

சரியா பதில் அளிக்காமல் திமிராக அபர்ணா பேசியதாவும், பணத்தை திரும்ப தரமுடியாது என கூறி, கடையை மூடிவிட்டு தப்பியோடியதாவும் தெரிகிறது. இதனால் அதிர்ந்துபோன மஞ்சு, மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து போலீசார் அபர்ணாவை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

 

Share this story