கமலிடம் பம்பியாக அசீம்... நீங்க நினைத்தப்படி நடக்காது என விளாசல் !

bb6

 நீங்க நினைத்தப்படியெல்லாம் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள் என்று அசீமை கமல் விளாசிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு வாரமும் பரபரப்பாக பெற்றுக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 6. ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடினார். இதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும், தளபதியாக அசீம், ராஜகுருவாக விக்ரமனும் விளையாடினார். 

 bigboss 6

டாஸ்க்கின் போது எச்சில் துப்பி தருகிறேன் சாப்பிடு என்று விக்ரமினிடம் அசீம் கூற பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அசீம் மற்றும் விக்ரமன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. அதேநேரம் அசீமுக்கு எதிராக மொத்த போட்டியாளர்களும் திரும்பினர். நேற்றைய எபிசோடில் இந்த விஷயம் கமலிடம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அசீமை கமல் வருத்தெடுத்தார். 

bigboss 6

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்றைய தின ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் உங்க விளையாட்டால் பாதிக்கப்பட்டது ஏடிகே தான் என்று கமல் கூறினார். அதற்கு பதிலளித்த அசீம், போன வாரம் ஒருமாதிரி விளையாடினேன். இந்த வாரம் வேறு மாதிரி விளையாடினேன். எனக்கு எப்படி விளையாடுவது என்றே தெரியவில்லை என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட கமல் நீங்கள் நினைத்தப்படியெல்லாம் இங்கு நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள் என கடிந்துக்கொண்டார். இனியாவது தனது விளையாட்டை அசீம் மாற்றுவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

 

 

 


 

Share this story