அசீமை கிழித்து தொங்கவிட்ட கமல்... வெட்கமே இல்லையா என கலாய்க்கும் நெட்டிசன்கள் !

bigboss

வழக்கம்போல் அசீமை கமல் கிழித்து தொங்கவிட்ட சம்பவத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் கடுமையான போட்டிகள் நடைபெற்றது. அதில் அமுதவாணன் அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு கோல்டன் டிக்கெட்டை பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றார். இதனால் மீதமிருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் பதற்றத்துடனே இருக்கின்றனர்.‌

bigboss 6

இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் கமல் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார்.  அப்போது கடந்த வார டாஸ்க்கில் 'ஓப்பனிங் எல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா ஃபினிஷிங் சரியில்லை' என்ற கமெண்ட் அசீமுக்கு கொடுக்கப்பட்டது. இந்த கமெண்ட் அசீமுக்கு கொடுத்தபோது அதை தூக்கி எறிந்து விட்டு என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என சென்றதாக கமலிடம் ஏடிகே கூறினார். 

bigboss 6

அதற்கு அந்த கமெண்ட் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. அதனால் தான் அதை தூக்கி எறிந்தேன் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட கமல் ஏன் அது ஏற்புடையதாக இல்லை. நீங்கள் நடந்து கொண்ட விதம் சரியாக இருந்ததா என யோசித்துப் பார்த்தீர்களா ?. அந்த விஷயத்தை ஏடிகே மற்றும் விக்ரமனிடம் சொன்னீர்களா ?.. அதை சொல்வதற்கு எது தடுத்தது என சரமாரியான கேள்விகளை எழுப்பினார். கமல் இவ்வளவு அசிங்கப்படுத்தியும் வெட்கமே இல்லாமல் அசீம் இருப்பதை கேட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

 

Share this story