டிக்கெட் டூ ஃபினாலே... ரணகளமான பிக்பாஸ் வீடு !

bigboss season 6

டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதால் அதில் யார் ஜெயிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற இன்னும் சில வாரங்களே உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இன்னும் 8 போட்டியாளர்களே உள்ளனர். கடந்த வாரம் மணிகண்டன் வெளியேறிய நிலையில் இந்த வார நாமினேஷனில் விக்ரமன், கதிரவன், ஷிவின், ரச்சிதா, மைனா நந்தினி, ஏடிகே, அமுதவாணன் ஆகிய 7 பேர் உள்ளனர். இதில் பிக்பாஸ் கேட்ட கேள்விகளுக்கு அசீம் பதில் அளித்துள்ளதால் நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார். 

bigboss season 6

 இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்படும் கோல்டன் டிக்கெட்டை வைத்து நாமினேஷில் இருந்து தப்பித்து விடலாம். இதற்காக கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அதில் சிறப்பாக விளையாடும் போட்டியாளர்களில் ஒருவர் இந்த வார இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவர். 

bigboss season 6

இந்த டாஸ்க்கின் முதல் போட்டியாக இரண்டு போட்டியாளர்கள் தங்களுக்குள் விவாதம் நடத்தவேண்டும் என்று கூறப்படுகிறது. அதன்படி அசீம் - ரச்சிதா, அமுதவாணன் - மைனா நந்தினி உள்ளிட்டோர் விவாதம் நடத்துகின்றனர். இந்த டாஸ்க்கால் பிக்பாஸ் வீடே ரணகளமாகியுள்ளது. 


 

Share this story