மாட்டிக்கொண்ட விருந்தாளிகள்... கமல் வைத்த ட்விஸ்டால் அதிர்ச்சி !

big boss 6

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த விருந்தாளிக்கு கமல் வைத்த ட்விஸ்ட் அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இன்னும் ஒரு வாரத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவுபெற உள்ளது. அதனால் இந்த வாரம் டாஸ்க் எதுவும் கொடுக்கப்பட வில்லை. அதேநேரம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய தனலட்சுமி, சாந்தி, ராபர்ட் மாஸ்டர், ஜிபி முத்து, அசல் கோலார், நிவாஷினி, குயின்சி, ஷெரினா ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இறுதிப் போட்டியாளர்களாக மற்ற 7 பேருக்கு கடுமையான சேக்ரிஃபைஸ் டாஸ்கை கொடுக்கின்றனர். 

big boss 6

அதன்படி விக்ரமன் ஒரு பக்கம் மீசை தாடி எடுக்கவேண்டும். ஏடிகே தலை முழுவதும் மொட்டை அடித்துக்கொண்டு உச்சி முடி விடவேண்டும். கதிருக்கு ஒரு பக்கம் சட்டை, பேண்ட் கிழிந்திருக்கவேண்டும். அசீம் புடவை அல்லது சுடிதார் அணியவேண்டும் என்று கூறுகின்றனர். மற்றவர்கள் சொன்ன விஷயத்தை செய்ய அசீம் மட்டும் மறுத்துவிட்டார். 

big boss 6

இந்நிலையில் இன்றைய தினத்தின் மூன்றாவது ப்ரோமோவில் விருந்தாளிக்கு ஒரு சின்ன கேம் இருக்கு. அதனால் கொஞ்ச நேரம் கார்டனில் உட்காருங்க என்கிறார் கமல். இதையடுத்து நீங்க என்ன தியாகம் பண்ணலாம் என்று இவர்கள் 7 பேரும் முடிவு செய்து சொல்வார்கள் என கமல் கூறுகிறார். அவங்க என்ன செய்தார்களோ அதையே நானும் செய்தால் அவங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இருக்காது என்று சொல்லும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. 


 


 

Share this story