பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்... கதறி கதறி அழுத ஷிவின் !

bigboss 6

பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் போட்டியாளர் ஒருவர் கிளம்பியதால் ஷிவின் கதறி கதறி அழுத காட்சிகள் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைபெற இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களாக அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா நந்தினி, ஷிவின் உள்ளனர். இதில் யார்‌ டைட்டிலை வின் செய்வர் என்று பார்வையாளர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதேநேரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளதால் கலகலப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. 

bigboss 6

இந்த நிகழ்ச்சியின் கடைசி டாஸ்க்கா பணப்பெட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. அதை யார் எடுத்துக் கொண்டு செல்லவார் என ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது அந்த பணப்பெட்டியில் 3 லட்சம் இருக்கும் நிலையில் அதை எடுக்க போகிறார்கள் என எதிர்பார்த்த நிலையில் கதிர் அதை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் பணப்பெட்டியை எடுக்கவேண்டாம். பணம்‌ இன்னும் அதிகரிக்கும் என்று சக போட்டியாளர்கள் கூறுகின்றனர். 

bigboss 6

யாருடைய பேச்சையும்‌ பொருட்படுத்தாத கதிர், அதிரடியாய் அந்த பணத்தை எடுக்கிறார்.‌ இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற தயாரான கதிர், பணத்திற்காக நான் இந்த முடிவை எடுக்கவில்லை. நான் எடுத்த சரியான முடிவு என நினைக்கிறேன். அனைவருக்கும் என் நன்றி என்று கூறிவிட்டு சென்றார். 

Share this story