முதல் நாளே, அதிரும் பிக்பாஸ் வீடு- அலறும் போட்டியாளர்கள்!

photo

பலருக்கும் பிடித்த ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமான ஒன்று பிக்பாஸ். நேற்று பிக்பாஸ் சீசன் 7 துவங்கப்பட்ட நிலையில், முதல் நாளே பிக்பாஸ் தனது வேலையை துவங்கிவிட்டார். அதற்கான புரொமோ தான்  தற்போது வெளியாகியுள்ளது.

photo

அதன்படி வழக்கமாக இல்லாமல் பிக்பாஸ் வீடு இந்த முறை இரண்டாக பிரிக்கப்பட்டு பிக்பாஸ் வீடு. ஸ்மால் பாஸ் வீடு என உள்ளது.  இதில் ஒவ்வொரு வாரமும் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்படும் ஆறு நபர்கள் ஸ்மால் பாஸ் விட்டுக்கு செல்ல வேண்டும். அந்த வகையில் முதல் நாளே ஐஷு, பாவா செல்லதுரை, அனன்யா, வினுஷா, ரவீனா, நிக்ஸ்ன்  அகியோர் சென்றுவிட்டனர்.

அந்த ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் என்ன மாதிரியான ரூல்ஸ்களை கடைபிடிக்க வேண்டும் என இரண்டாவது புரொமோவில் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லக்கூடாது; எந்த டாஸ்கிலும் பங்குபெற கூடாது; ஷாப்பிங் போக கூடாது, பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் உணவைத்தான் சமைக்க வேண்டும்; இதனை விட முக்கியமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தான் செய்ய வேண்டும். கடுமையான கெடுபிடிகளுடன் துவங்கிய  இந்த சீசனில் இனி என்ன நடக்கும் என்பதை பெறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story