பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்- உற்சாகத்தில் ரசிகர்கள்.

photo

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களுள் ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை கடந்த நிலையில் தற்போது ஏழாவது சீசனுக்கான அப்டேட் வந்துள்ளது.  

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் அப்டேட்டாக சீசன் 7-ன் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் கடலுக்கு நடுவே நடைபாதியில்  கமல்ஹாசன் நின்று அவருக்கே உரிய பிக்பாஸ் நிகழ்ச்சிகான அந்த கை அசைவை செய்கிறார். இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் எதிர்பார்பை அதிகரித்துள்ளது. நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடக்கத்தில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.  தொடந்து நடிகர் பப்லு, தொகுப்பாளர் ஜக்குலின், விசித்ரா, ரேக்கா நாயர், மிளா, செய்திவாசிப்பாளர் ரஞ்சித் என நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் பெயர்கள் வரிசையாக அடிபட்டுவரும் நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் மட்டுமே உண்மை தகவல் தெரியவரும்.

Share this story