விரைவில் உங்களை சந்திக்கிறேன்... அன்பும், ஆதரவுக்கும் நன்றி - வீடியோ வெளியிட்ட விக்ரமன் !

vikraman

உங்கள் வீட்டுப்பிள்ளையா நினைச்சு ஆதரவு கொடுத்த உங்கள் அன்புக்கு நன்றி என பிக்பாஸ் விக்ரமன் தெரிவித்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விக்ரமன் தான் பிக்பாஸ் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

vikraman

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே மிகவும் நிதானமாக விளையாடி வந்தார் விக்ரமன். பிக்பாஸ் வீட்டில் நியாயத்திற்காக மட்டுமே அவர் குரல் கொடுத்தார். அறம் வெல்லும் என்று கூறி அனைவரின் நெஞ்சிலும் இடம்பிடித்தார். அவர் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படாததது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. 

vikraman

அதேநேரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மேடையில் பேசிய அவர், நான் ஒவ்வொரு இடத்திலும் போராடிதான் வெற்றி பெற்றிருக்கிறேன். நான் இரண்டாம் இடத்தை பிடித்ததில்லை வருத்தமில்லை. வெளியேயும் என் போராட்டம் தொடரும். அறம் வெல்லும் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் பிக்பாஸ் விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உங்கள் வீட்டுப்பிள்ளையா நினைச்சு ஆதரவு கொடுத்திருக்கீங்க. தன்னெழுச்சியாக வந்த அன்புக்கு மிக்க நன்றி. உங்களை விரைவில் நேரில் சந்திக்க இருக்கிறேன். அது குறித்து விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். 


 

Share this story