“உங்கள் குணம் , உங்கள் தரம் என்ன என்பதை காட்டிவிட்டது” அசிங்கப்பட்ட அசீம்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஆறாவது வாரம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் எதற்கொடுத்தாலும் சண்டை ,பிரச்சனை என அதகலம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ‘ராஜவம்சமும் அருங்காட்சியகமும்’ டாஸ்கில் வழக்கம் போல சண்டை தொற்றிக் கொண்டது. அதில் வர இறுதிக்கான பிரோமோவில் கமல் தன் பதவிக்கு தகுதியே இல்லாமல் நடந்து கொண்டது யார்? என கேட்க,விக்ரமன் , படைத்தளபதி என சொல்லி அதிகாரம் செய்வதும், கழுத்தில் கத்தியை வைப்பது மட்டுமே படைத்தளபதியின் வேலை இல்லை என அதற்கான விளக்கதையும் கொடுக்கிறார். அவர் பேசிய விதம் ரொம்ப, தோரணை அனைத்தும் அதிகாரத்தனமாக இருந்தது என்று ஏடிகே சொல்ல, அடுத்து எழுந்த ஆயிஷா, அவர் முழுக்க முழுக்க கேரக்டராகவே இல்லை ரொம்ப பர்சனலாத்தான் இருந்துச்சு சண்டை மட்டும்தான் போட்டாரு என அனைவரும் அசீமை குறிவைத்து கூறுகின்றனர்.
தொடர்ந்து வந்த பிரோமோவில் ‘சோற்றில் எச்சில் துப்பி தருகிறேன்’ என அசீம் கூறிய விவகாரம் சபைக்கு வர….;விக்ரமன் அது எனது சுய மரியாதையை சீண்டியதாக உணர்ந்ததாக கூறுகிறார். உடனே கமல்’ உங்கள் குணம் , உங்கள் தரம் என்ன என்பதை காட்டிவிட்டது’என கூற அது அசீமிற்கு சவுக்கு அடி போல விழுகிறது.